ஈராக்கில் தீவிரமடையும் போராட்டம்

ஈராக்கில் தீவிரமடையும் போராட்டம்

1 mins read

பாக்தாத்: முன்னாள் அதிபர் சதாம் உசேன் மறைவுக்குப் பிறகு ஈராக்கில் மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களுக்காக ஈராக் மக்கள் கடந்த ஒரு மாதமாக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த ஒரு மாத காலத்தில் போராடியவர்களில் கிட்டத்தட்ட 250 பேர் உயிரிழந்த நிலையில், அண்மைய நாட்களாகப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவும் நேற்றுக் காலையிலும் நடந்த போராட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக போலிஸ், மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.