ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள்

ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள்

1 mins read

பியோங்யாங்: ஒன்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவும் சோதனையை நேற்று மூன்றாவது முறையாக வெற்றிகரமாகச் செய்து முடித்ததாக வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான 'கேசிஎன்ஏ' அறிவித்துள்ளது. அந்த 'சூப்பர் லார்ஜ் மல்ட்டிபிள் ராக்கெட் லாஞ்ச்சர்' ஆயுதத்தைக் கடந்த ஆகஸ்ட்டிலும் செப்டம்பரிலும் வடகொரியா சோதித்துப் பார்த்திருந்தது. அண்மைய சோதனை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு மனநிறைவு அளித்ததாகவும் அதற்காக அவர் விஞ்ஞானிகளைப் பாராட்டியதாகவும் அந்தச் செய்தி கூறியது. அணுஆயுதக் களைவு தொடர்பில் அமெரிக்கா-வடகொரியா இடையே இருமுறை பேச்சுவார்த்தை நடந்தும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை.