இம்ரானுக்கு எதிராக பேரணி

இம்ரானுக்கு எதிராக பேரணி

1 mins read
c2f9ed3e-6ddc-4b2d-9cd4-37010a96d0da
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தியுள்ளன. படம்: ஏஎஃப்பி -

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

இஸ்லாமிய தலைவரான மவுலானா ஃபஸ்லுர் ரெஹ்மான் தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கராச்சியில் ரெஹ்மான் பேரணியைத் தொடங்கினார்.

சுமார் 2,000 கிலோ மீட்டர் கடந்து சென்ற அவர்கள் வியாழக் கிழமை நள்ளிரவு இஸ்லாமாபாத் நகரை அடைந்தனர்.

இதில் முன்னாள் அதிபர் அசிஃப் அலி ஸர்தாரி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃப் ஆகியோரின் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர் களும் பங்கேற்றனர்.

பாகிஸ்தானின் சக்திவாய்ந்த சமயத் தலைவர்களில் ஒருவரான 66 வயது ரெஹ்மான், இம்ரான் பதவி விலக வேண்டும், இல்லையேல் ஆயிரக்கணக்கானவர்களின் ஆர்ப்பாட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.

"சட்டவிரோத அரசாங்கத்தை தூக்கியெறிவோம்," என்று இஸ்லாமாபாத் நகரில் பேசியபோது அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராணுவத்தின் செல் வாக்கைப் பயன்படுத்தி இம்ரான் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

1947ல் விடுதலை பெற்ற பிறகு பாகிஸ்தானை ஏறக்குறைய பாதிக் கும் மேற்பட்ட காலத்தில் ராணுவம் ஆட்சி புரிந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.