கடலில் விழுந்த ஹெலிகாப்டர்: மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன

கடலில் விழுந்த ஹெலிகாப்டர்: மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன

1 mins read

சோல்: தென்கொரியாவும் ஜப்பானும் சொந்தம் கொண்டாடும் தீவிலிருந்து புறப்பட்டுச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கடலிலிருந்து மூன்று சடலங்களை கண்டெடுத்து மீட்டதாக தென்கொரிய மீட்புப் படையினர் தெரிவித்தனர். ஹெலிகாப்டரில் இருந்த ஏழு பேரில் மூவரின் சடலமாக இவை இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.