ஹாங்காங் தாக்குதல்: சாடும் சீன ஊடகம்

ஹாங்காங் தாக்குதல்: சாடும் சீன ஊடகம்

1 mins read
70932fe1-c3bf-421a-8f3f-769e436b5051
நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலிசாரால் தடுத்து வைக்கப்பட்ட ஒரு பெண் ஆர்ப்பாட்டக்காரர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் நேற்று 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமை இரவு நடைெபற்ற வன்முறைக் கலவரங்களைத் தொடர்ந்து நேற்றும் முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் படையெடுத்தனர். போலிசாரின் வன்முறையை எதிர்த்துக் குரல் கொடுக்க நேற்று நாட்டின் ஏழு பகுதிகளில் கூடினர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் சீனாவின் அதிகாரபூர்வ ஊடக நிறுவனமான சின் ஹுவா உட்பட பல கட்டடங்களைச் சேதப்படுத்தியதுடன் ரயில் நிலையங்களுக்கும் தீ வைத்தனர். சின் ஹுவா செய்தி நிறுவனத்தின் கதவுகள் பாதுகாப்பு முறைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் பாழ்படுத்தியதுடன் கட்டடத்தின் மீது தீ, சாய குண்டுகளை வீசினர். இந்தத் தாக்குதலைக் காட்டுமிராண்டித்தனமான காலிகள் மேற்கொண்டதாக சின் ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.

"கலவரக்காரர்கள் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் அவர்களின் வன்முறையை அடக்கி ஒழுங்கை அங்கு நிைலநாட்டுவதே ஹாங்காங்கின் மிக முக்கியமான, தலையாய பணி என்பதைக் காட்டுகிறது," என்று சின் ஹுவா பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று சின் ஹுவா ஊழியர்கள் கட்டடக் கதவுகள், சன்னல்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட சேதம் காரணமாக சிகறிக் கிடந்த கண்ணாடி சில்லுகளைச் சுத்தம் செய்வதை காண முடிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் விவரிக்கிறது.