ஐந்து வயது சிறுவனின் மிதமான குறைபாட்டால் விசா மறுக்கப்பட்டுள்ள குடும்பம்

ஐந்து வயது சிறுவனின் மிதமான குறைபாட்டால் விசா மறுக்கப்பட்டுள்ள குடும்பம்

2 mins read
a431f37f-0e97-42c3-a78c-8e609ee5d56e
சிறுவன் அதியனுக்கு  உள்ள மிதமான குறைப்பாடு, மருத்துவ ரீதியாக ஆஸ்திரேலிய நாட்டுக்குச் சுமையாக இருக்கும் என்ற காரணத்தால் சிறுவனின் குடும்பத்தாரது விசா விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் சிறுவனும் அவனின் குடும்பத்தாரும் பங்ளாதேஷுக்குத் திருப்பி அனுப்பப்படும்  நிலையை எதிர்நோக்குகின்றனர். படம்: தி கார்டியன் -

ஐந்து வயது சிறுவனான அதியனுக்கு உள்ள மிதமான குறைப்பாடு, மருத்துவ ரீதியாக ஆஸ்திரேலிய நாட்டுக்குச் சுமையாக இருக்கும் என்ற காரணத்தால் சிறுவனின் குடும்பத்தாரது விசா விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் சிறுவனும் அவனின் குடும்பத்தாரும் பங்ளாதேஷுக்குத் திருப்பி அனுப்பப்படும் நிலையை எதிர்நோக்குகின்றனர்.

டாக்டர் மஹேடி ஹசன் பூயான் 2011ஆம் ஆண்டில் மாணவர் விசாவழி ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். மறு ஆண்டு அவரும் ரெபாக்கா சுல்தானாவும் பங்ளாதேஷில் திருமணம் செய்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து சுல்தானா 2013ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா வந்து கணவருடன் இணைந்தார். அதே ஆண்டில் அவர்களின் மகன் அதியன் பிறந்தார்.

அவர் பிறந்து சில மாதங்களில், தலையை உயர்த்தச் சிரமப்படுவதை பூயானும் சுல்தானாவும் கவனித்தனர். அதியனுக்கு மிதமான பெருமூளை வாதம் இருப்பது சோதனைகள் மூலம் தெரியவந்தது.

அதியன் பிறப்பதற்கு சற்று முன்னதாகவோ அதற்குப் பின்னரோ ஏற்பட்ட பக்கவாதத்தால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம்.

பூயானுக்கு நிரந்தரத் திறன் இடம்பெயர்வு விசா வழங்க விக்டோரியன் மாநில அரசு நியமனம் செய்தது. ஆஸ்திரேலியாவில் ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இது உதவும்.

ஆனால், ஆஸ்திரேலியாவின் கடுமையான சுகாதார விசா நிபந்தனைகளின்படி அதியனின் குறைப்பாடைச் சுட்டி, விசா மறுக்கப்பட்டது.

இதன் தொடர்பில் நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மூலம் பூயானின் குடும்பத்தினர் விசா நிராகரிப்பு தொடர்பில் மேல்முறையிட்டனர்.

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மறுப்பை உறுதிசெய்தது தீர்ப்பாயம்.

அதியனுக்கு மிதமான செயல்பாட்டுக் குறைபாடு இருப்பதாக 2019ஆம் ஆண்டுக்கான மருத்துவ மதிப்பீடு கண்டறிந்துள்ளது. இது நிரந்தரமாக இருக்கலாம். மேலும் பள்ளியில் கூடுதல் ஆதரவு உள்ளடக்கிய சமூக சேவைகள் தேவைப்படும் சாத்தியம் அதிகம் என மதிப்பீடு கூறுகிறது.

அதியனின் மருத்துவ மதிப்பீட்டு முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக பூயான் குறிப்பிட்டார்.

ஆஸ்-தி-ரே-லி-யா-வில் தங்-கு-வ-தற்-கான கடைசி வாய்ப்-பாக குடும்-பம் குடி-நு-ழைவு அமைச்-சர் டேவிட் கோல்-ம-னி-டம் முறை-யீடு செய்-துள்-ளது.