லண்டன்: உடன்பாடு எதுவும் காணப்படாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் என்று இதுவரை மிரட்டல் விடுத்துவந்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது அந்த மிரட்டலை கைவிட்டிருப்பதாக டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக போரிஸ் ஜான்சன், உடன்பாடு காணப்பட்டாலும் அல்லது உடன்பாடு எதுவும் காணப்படவில்லை என்றாலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் என்று உறுதியளித்திருந்தார்.
தற்போது அவர் அந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அவர் தனது மிரட்டலை கைவிட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நாடாளுமன்றம் மூலம் பிரெக்சிட் உடன்பாடு காண அவர் தற்போது உறுதியளித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற முன்பு டிசம்பர் 31ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்து. தற்போது வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை அந்த காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது. அதற்குள் உடன்பாடு காணவேண்டிய இக்கட்டான சூழலில் பிரிட்டன் உள்ளது. உடன்பாடு எதுவும் காணப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறினால் பிரிட்டிஷ் பொருளியல் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

