பேங்காக்: தென்சீனக் கடல் விவகாரத்தில் ஆசியான் நாடுகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் சனிக்கிழமை தொடங்கிய ஆசியான் கூட்டத்தில் சீனப் பிரதமர் லி கியாங் இந்த உறுதியை அளித்தார்.
தென்சீனக் கடல் பகுதியில் நீண்டகால அமைதி மற்றும் நிலைத்தன்மை கட்டிக்காக்கப்படுவதை சீனா விரும்புவதாக அவர் கூறினார். இதனால் தென்சீனக் கடல் பகுதியில் உரிமை கொண்டாடும் நாடுகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அவர் சொன்னார். அந்தக் கடலின் பெரும் பகுதியை உரிமை கொண்டாடும் சீனா அதன் கோரிக்கையை வலுப்படுத்தும் விதமாக அப்பகுதயில் அதன் ராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையை அதிகரித்து வருகிறது.
சீனா அதன் போர்க் கப்பல்களை அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதற்கு அந்த கடல் பகுதியில் உரிமை கொண்டாடும் மற்ற நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தென்சீனக் கடல் விவகாரம் தொடர்பில் காணப்பட்ட உடன்பாடு 2021ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ள நிலையில் புதிய உடன்பாடு காண விதிமுறைகளை நிர்ணயிப்பதில் ஆசியான் நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதற்கிடையே பேங்காக் கூட்டத்தில் உரையாற்றிய ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், மியன்மார் ராணுவ நடவடிக்கைக்குப் பயந்து அங்கிருந்து வெளியேறிய ஆயிரக் கணக்கான ரோஹிங்யா அகதிகள் பத்திரமாக நாடு திரும்புவதை மியன்மார் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

