அமேசான் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை

அமேசான் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை

1 mins read

பிரேசிலில் உள்ள அமேசான் காடு களில் நிலத்துக் காகப் போராடிவந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சட்டவிரோத மாக செயல்படும் மரம் வெட்டும் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். வனப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டுபவர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் லோ பெளலினோ என்ற இளைஞர் தலையில் குண்டு பாய்ந்ததாகக் கூறப்பட்டது. பெளலினோ மரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ள பிரேசில் நாட்டின் நீதித்துறை அமைச்சர் செர்ஜியோ மோரோ, "இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர் களை நீதிக்கு முன்பு நிறுத்து வோம்," என்று கூறியுள்ளார்.