சிரியா கார் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி; பலர் காயம்

சிரியா கார் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி; பலர் காயம்

1 mins read

இஸ்தான்புல்: துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் உள்ள ஒரு நகரில் சனிக்கிழமை கார் குண்டு வெடித்ததில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 30 பேர் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசாங்கத்திற்குச் சொந்தமான ஊடகத் தகவல்கள் கூறின. டெல் அப்யாட் நகரில் உள்ள சந்தை இடத்தில் குண்டு வெடித்ததாகவும் அந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு சிரியாவில் உள்ள குர்தியப் போராளிகளே காரணம் என்றும் துருக்கிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் துருக்கி ஆதரவு பெற்ற போராளிகளே அந்தத் தாக்குதலை நடத்தியதாக சிரியாவில் உள்ள மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. துருக்கிய ராணுவம் சென்ற மாதம் டெல் அப்யாட் நகரில் குர்தியப் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது முதல் அங்கு சண்டை நீடிக்கிறது. குர்தியப் போராளிகள் குழுவை பயங்கரவாதக் குழுவாக துருக்கி கருதுகிறது.