அமெரிக்கா-தென்கொரியா ராணுவப் பயிற்சி நிறுத்திவைப்பு

1 mins read

சோல்: அமெரிக்காவும் தென்கொரியாவும் வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளவிருந்த ராணுவ கூட்டுப் பயிற்சியை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளன. வட கொரியாவுடன் பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்கும் பொருட்டு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கூட்டுப் பயிற்சியை நிறுத்திவைக்க தீர்மானித்திருப்பதாக அதிகாரி ஒருவர் கூறியதாக தென்கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்தது. முன்பு திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயிற்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க விமானங்கள் ஈடுபடுத்தப்படவிருந்தன. இம்மாத மத்தியில் தென்கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்தித்துப் பேசும்போது கூட்டுப் பயிற்சியை நிறுத்திவைப்பது குறித்து இறுதி முடிவு எடுப்பர் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.