சான் பிரான்சிஸ்கோ: கலிபோர்னியா, காட்டுத் தீயால் திண்டாடி வரும் வேளையில் மத்திய அரசின் நிதியை நிறுத்தப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டியிருக்கிறார்.
கடந்த சில வாரங்களில் காட்டுத் தீயில் சுமார் 100,000 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலங்கள் நாசமாகிவிட்டன. ஆயிரக்கணக்கான மக்களும் வீட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் தீச்சம்பவங்களை முறையாக நிர்வகித்து கட்டுப்படுத்த அம்மாநில ஆளுநர் தவறிவிட்டார் என்று அவர் சாடியுள்ளார்.
"ஒவ்வொரு ஆண்டும் காட்டுத் தீ நிலங்களை எரித்து நாசமாக்கி வருகிறது. இேத போன்று மீண்டும் மீண்டும் நடக்கிறது. இதனை ஆளுநர் சரியாக நிர்வகிக்கவில்லை. பின்னர் மத்திய அரசிடம் நிதியுதவி கேட்கிறார்கள். இனிமேல் முடியாது," என்று திரு டிரம்ப் கூறினார்.
ஆனால் கலிபோர்னியா ஆளுநரான காவின் நியூசோம், "டிரம்ப்பின் கருத்து எங்களுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப்பின் சுற்றுச் சூழல் கொள்கைகளை ஆளுநர் நியூசோம் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதால் அவர் மீது டிரம்ப் பாய்ந்து உள்ளார்.

