தைவான் மக்களை ஈர்க்க சீனா வியூகம்

தைவான் மக்களை ஈர்க்க சீனா வியூகம்

1 mins read

தைப்பே: தைவான் நிறுவனங்களையும் அந்நாட்டின் தனிப்பட்ட நபர்களையும் ஈர்க்க சீனா பலதரப்பட்ட ஊக்குவிப்புகளை அறிவித்துள்ளது.

ஜனநாயகத் தீவான தைவானை இந்தத் தலைமுறைக்குள் சீனாவுடன் இணைக்கும் நோக்கத்துடன் இந்த ஊக்குவிப்புகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

தைவானில் ேதர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் அந்நாட்டின் தொலைத் தொடர்பு, கல்வி, விளையாட்டு துறைகள் உள்ளடக்கிய நிறுவனங்களையும் தனிப்பட்டவர்களையும் இலக்காகக் கொண்டு 26 ஊக்குவிப்பு திட்டங்களை சீனா வெளியிட்டது.

தைவான் மக்களின் மனங்களைக் கவர மாணவர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கவும் சீனா முன் வந்து உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பேசிய சீன அதிபர் ஸி ஜின்பிங், சீனாவின் ஒரு பகுதி தைவான் என்பதை ஆதரிப்பவர்கள் அந்த இலக்குக்காகப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான முட்டுக்கட்டை தலைமுறை, தலைமுறையாகத் தொடரக் கூடாது என்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் அப்போது எச்சரித்தார்.