லாரியில் சடலங்கள்; 8 பேர் கைது

லாரியில் சடலங்கள்; 8 பேர் கைது

1 mins read

ஹனோய்: லண்டனுக்கு அருகே ஒரு லாரியில் 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் வியட்னாமிய போலிசார் எட்டுப் பேரை கைது செய்துள்ளனர்.

"சந்தேக நபர்கள் தெரிவித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு செல்லும் கும்பலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்," என்று நீ ஆன் மாகாண போலிஸ் தலைவர் நுயன் ஹு சவ் தெரிவித்தார். கடந்த வெள்ளிக் கிழமை இந்தச் சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்த வியட்னாமிய போலிசார், சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.