பாக்தாதியின் சகோதரியை கைது செய்துவிட்டோம்: துருக்கி அறிவிப்பு

பாக்தாதியின் சகோதரியை கைது செய்துவிட்டோம்: துருக்கி அறிவிப்பு

1 mins read

அங்காரா: அமெரிக்க சிறப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் அண்மையில் உயிரை மாய்த்துக்கொண்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 26ஆம் தேதி சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷாவில் ஒளிந்திருந்த பாக்தாதியை அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்ததால் அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.

இப்போது, 65 வயதாகும் பாக்தாதியின் மூத்த சகோதரியான ராஸ்மியாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் துருக்கிய ராணுவம் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அஜாஸ் நகரில் நேற்று முன்தினம் மாலை அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்

புடன் ராஸ்மியா தொடர்பு கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவரிடம் துருக்கிய ராணுவம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாக்தாதி மரணத்துக்குப் பின் ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருப்பவர் அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரைஷி.

பாக்தாதி இறப்புக்குப் பழிவாங்கப்படும் என்று அவர் மிரட்டியுள்ளதுடன் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை கடுமையாக சாடியுள்ளார்.

பாக்தாதியின் இறப்பை திரு டிரம்ப் வெற்றியென கூறிக்கொண்டாலும் சிரியாவிலும் பிற இடங்களிலும் ஐஎஸ் அமைப்பு இன்னும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே விளங்குவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.