பெட்டாலிங் ஜெயா: மலேசியாவிலிருந்து தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோவின் கடப்பிதழ் பறிக்கப்படலாம் என்பதை சைப்ரஸ் நாட்டு அதிபர் நிக்கோஸ் அனாஸ்டாசியாடெஸ் கோடி காட்டியுள்ளார்.
அது குறித்து சைப்ரஸ் மெயில் நாளேடு வினவியதற்கு, "ஆமாம்" என்று அவர் பதிலளித்ததாக மலேசியாவின் தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது. 1எம்டிபி மோசடியுடன் தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டும் ஜோ லோவுக்கு சைப்ரஸ் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியபோது கடப்பிதழைப் பறிப்பதற்கு முன் தீவிரமாக விசாரிக்கப்படும் என்றார் அவர்.

