ஜோர்தானில் சுற்றுப்பயணிகள் பலருக்குக் கத்திக்குத்து

அம்மான்: ஜோர்தானில் சுற்றுப்பயணிகள் பலர் கத்தியால் குத்தப்பட்டதாக அந்நாட்டு போலிசார் நேற்று தெரிவித்தனர். ஸ்பானிய மொழி பேசிய அந்த சுற்றுப்பயணிகள் உள்ளூர் வழிகாட்டி ஒருவருடன் பிரபல சுற்றுலாத் தளத்தில் இருந்தபோது தாக்குதல் நிகழ்ந்தது.

காயமுற்றவர்களில் மூவர் பெண்கள்.  அவர்களில் மூன்று பேர் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய ஆடவர் கைது செய்யப்பட்டதாக ஜோர்தானிய போலிசார் கூறினர். ஜோர்தானில் வெளிநாட்டுச்சுற்றுலாப் பயணிகள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல.

சென்ற 2016ஆம் ஆண்டு காரக் நகரில் சுற்றுலாப்பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர் 30 பேர் பலத்த காயமடைந்தனர்.