ஹனோய்: சீனாவுக்கும் வியட்னாமுக்கும் இடையே தென் சீனக் கடல் எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது.
இதுதொடர்பாக சீனாவுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து வியட்னாம் பரிசீலனை செய்து வருகிறது. அனைத்துலக அளவில் வியட்னாமின் தனிப்பட்ட பொருளியல் வட்டாரமாகக் கருதப்படும் கடற்பகுதிக்குக் கடந்த ஜூலை மாதத்தில் சீனா கப்பல் அனுப்பியதை அடுத்து இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்தக் கடற்பகுதியில் ஆய்வு நடத்த சீனா கப்பலை அனுப்பியது. சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வியட்னாம் விரும்பியபோதிலும் கடல் எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க சட்ட ரீதியான நடவடிக்கையைத் தவிர வேறு வழியில்லை என்று வியட்னாமிய துணை வெளியுறவு அமைச்சர் லீ ஹுவாய் டுருங் குறிப்பிட்டார்.

