சீனர்களின் வாக்குகளை உடைக்க போட்டியிடவில்லை

சீனர்களின் வாக்குகளை உடைக்க போட்டியிடவில்லை

1 mins read

பொந்தியான்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள தஞ்சோங் பியாய் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கெராக்கான் கட்சி சார்பாக வென்டி சுப்பிரமணியம் போட்டியிடுகிறார்.

அந்தத் தொகுதியின் சீன வாக்காளர்களின் வாக்குகளை உடைக்க தாம் போட்டியிடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எந்தக் கூட்டணியின் பக்கமும் சாயாத குரல் மக்களைப் பிரதிநிதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தாம் போட்டியிடுவதாக திருமதி வென்டி தெரிவித்தார்.

"மலேசிய சீனர் சங்கம் இத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பே நாங்கள் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டோம். எங்கள் கட்சி சார்பாகப் போட்டியிடுபவர் யார் என்பதை நாங்கள் முன்கூட்டியே அறிவித்துவிட்டோம்.

"தேசிய முன்னணியைப் பிரதி நிதித்து மலேசிய சீனர் சங்கத்தின் டாக்டர் வீ ஜெக் செங் போட்டியிடுவார் என்ற அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே தஞ்சோங் பியாய் மக்களிடம் எங்கள் கட்சியின் வேட்பாளரை அறிமுகம் செய்துவிட்டோம். தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் இம்மாதம் 16ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் ஆறு முனை போட்டி நிலவுகிறது. ஆளும் கூட்டணி பக்கத்தான் ஹரப்பான் சார்பாக கார்மேன் சார்டினி போட்டி யிடுகிறார். தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது ஃபரித் முகம்மது ரஃபிக் கடந்த செப்டம்பரில் இறந்தார்.