ரகசியங்களை வெளியிட்டார் பாக்தாதியின் மனைவி

இஸ்தான்புல்: அண்மையில் அமெரிக்காவில் அதிரடிப் படையால் கொல்லப்பட்ட ‘ஐஎஸ்ஐஎஸ்’ பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் மனைவி கடந்த ஆண்டில் பிடிக்கப்பட்ட பிறகு, அந்தப் பயங்கரவாதக் குழுவின் ரகசியமான நடவடிக்கைகள் பற்றி நிறைய தகவல்களை வெளியிட்டார் என்று துருக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

பிடிபட்டவுடன் பாக்தாதியின் மனைவி ரணியா மஹ்முத் என்று தம்மை அறிமுகப்படுத்திகொண்ட அவர் உண்மையிலேயே பாக்தாதி யின் முதல் மனைவி அஸ்மா ஃபௌஸி முகம்மது அல்-குபேசி என்று பின்னர் தெரிய வந்தது.

அஸ்மா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதியன்று சிரியா நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள ஹட்டே மாநிலத்தில் கைது செய்யப் பட்டார். அவருடன் பாக்தாதியின் மகள் லேலா ஜபீர் உட்பட பத்து பேர் கைதாகினர்.

ஈராக்கிய அமைப்புகள் அளித்த பாக்தாதியின் மரபணுக் கூறுகளை வைத்து பார்க்கையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் கைதானவர் களில் இருக்கிறார்கள் என்பது உறுதியானது.

“பாக்தாதியின் மனைவியின் அடையாளத்தை நாங்கள் விரை வில் உறுதிப்படுத்தி விட்டோம். அந்தத் தருணத்தில் அவர் ஐஎஸ் அமைப்பின் ரகசிய நடவடிக்கை கள், திட்டங்கள் பற்றியும் பாக் தாதியைப் பற்றியும் அதிகமான தகவல்களைப் பகிர்ந்துகொண் டார்,” என்று அந்த அதிகாரி கூறி னார்.

“எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த தகவல்களை அஸ் மாவின் பதில்கள் உறுதி செய்தன. மேலும் அவர் கூறிய புதிய தகவல்கள் இதர இடங்களில் அந்தப் பயங்கரவாதக் குழு வினரின் கைது நடவடிக்கைகளுக்கு வழி வகுத்தன,” என்றார் அதிகாரி.

அஸ்மா தடுத்து வைக்கப்பட்டு உள்ளார் என்று துருக்கிய அதிபர் ரெசேப் தயிப் எர்டுவான் நேற்று முன்தினம் முதல் முதலாகத் தெரி வித்தார்.

“பாக்தாதியின் மனைவியைப் பிடித்திருக்கிறோம். நான் இதை முதன் முதலாக அறிவிக்கிறேன். ஆனால் அதை பெரிதுப்படுத்த வில்லை,” என்று அங்காராவில் மாணவர்கள் ஒன்றுகூடலில் அதிபர் எர்டுவான் சொன்னார்.

பாக்தாதியின் சகோதரியையும்  அவர் கணவரையும்கூட துருக்கி கைது செய்துள்ளதை உறுதிப் படுத்தினார். 

இவ்வாறு இருக்க, பாக்தாதி கொல்லப்பட்டதை அமெரிக்கா பெருமைப்படுத்தி பேசி வருவதை அதிபர் எர்டுவான் சாடினார்.

துருக்கியின் எல்லைக்கு அப் பால் உள்ள சிரியாவின் இத்லிப் மாநிலத்தின் வடமேற்குப் பகுதி யில் குர்தியப் படை வீரர்களின் உதவியுடன் அமெரிக்காவின் அதிரடிப் படையினர் ஐஎஸ் அமைப் பின் தலைவரைக் கொன்றனர்.