பெண் மேயரை அவமானப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்

பொலிவியா நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டு அதிபர் ஈவோ மொரேல்ஸ் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விண்டோ என்ற சிறிய நகரில் பாலம் ஒன்றை முடக்கி பலர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, அதை முடக்கும் விதத்தில் பெண் மேயர் பார்டீசியா அர்ஸ் தடைகளை அகற்ற முற்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை வலுக்கட்டாயமாக வீதிகளில் இழுத்துச் சென்றனர். 

அவரது கூந்தலை வெட்டிய  ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் மீது சிவப்பு நிற சாயத்தை ஊற்றியதுடன் அவரைப் பதவி விலக வற்புறுத்தினர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் மேயரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.