ஈரானில் நிலநடுக்கம்

ஈரானில் நிலநடுக்கம்

1 mins read

துபாய்: ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்ததில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 120க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கிழக்கு அஸர்பைஜான் மாகாணத்தில் உள்ள ஹாஷ்டிருட் நகரத்திலிருந்து 57 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி நேற்று விடியற்காலை 2.17 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.

இந்தப் பகுதியில் குறைந்தது மூன்று கிராமங்கள் நாசமடைந்ததாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓடினர். தகவல் அறிந்து அங்கு வந்த மீட்புப்படையினர் மீட்பு நடவடிக்கைளை முடுக்கிவிட்டுள்ளனர்.

செஞ்சிலுவைச் சங்கம், அவசரகால நடவடிக்கை குழு ஆகியவையும் மீிட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

நிலநடுக்கம் ஏற்படும் அரேபிய-யூரோ சியா வட்டாரத்தில் அமைந்துள்ள ஈரானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் ஈரான்-ஈராக் எல்லையில் நிகழ்ந்த நில நடுக்கத்தில் 361 பேர் மாண்டனர்.