படிக்கட்டுகளை நோக்கி தவழ்ந்த குழந்தை; பாய்ந்து சென்று காப்பாற்றிய பூனை

படிக்கட்டை நோக்கித் தவழ்ந்த குழந்தையைத் தக்க சமயத்தில் தடுத்து நிறுத்திக் காப்பாற்றியுள்ளது ஒரு வீரதீர பூனை. 

சென்ற மாதம் காலை சுமார் ஐந்து மணியளவில் குழந்தை தொட்டிலிலிருந்து வெளியேறி வீட்டுக்கூடத்தில் தவழ்ந்து, படிக்கட்டுகளை நோக்கிச் செல்லும் காணொளி ஒன்றை ஃபேஸ்புக் பயனாளர் டிலோர் அல்வரெஸ் பகிர்ந்துகொண்டார். படிக்கட்டுகள் கல்லால் ஆனவை. அவற்றில் குழந்தை உருண்டு விழுந்திருந்தால் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

அந்த நேரத்தில் வீட்டின் செல்லப்பிராணியான வளர்ப்புப் பூனை, தாவிக் குதித்து அதன் கால்களால் குழந்தை தவழ்வதைத் தடுத்துவிட்டது. 

அத்துடன், வேறு பக்கமாகத் தவழும் வகையில் பூனை குழந்தையைத் திசைதிருப்பியது.

தொட்டிலை விட்டு குழந்தை எப்படி வெளியேறியது என்பதை அறிந்துகொள்வதற்காக குழந்தையின் பெற்றோர் வீட்டில் பொருத்தப்பட்ட உள்கட்டமைப்புக் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகிய காணொளியைப் பார்த்தபோது பூனையின் வீரச்செயலைக் கண்டனர்.
 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity