குருநானக் பிறந்த நாள்; பாதை திறப்பு

புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு இட்டுச் செல்லும் இந்திய-பாகிஸ்தான் அரசுகளால் அமைக்கப்பட்ட கர்தார்பூர் பாதை நேற்று அதிகாரபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் எல்லையோரம் இரு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கர்தார்பூர் பாதையை திறந்துவைத்தனர்.

பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தானில் உள்ள குருத்வாராவுக்குச் செல்லும் முதல் 500 சீக்கிய யாத்ரீகர்களை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார்.

இதே போல பாகிஸ்தான் தரப்பில் இம்ரான் கான் பாதையைத் திறந்துவைத்தார்.

இதில் இந்தியாவிலிருந்து வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட இந்திய யாத்ரீகர்களை இம்ரான் கான் வரவேற்றார். இந்த விழாவில் பங்கேற்க இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு இம்ரான் கான் சிறப்பு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.

இதனை ஏற்று கர்தார்பூர் பாதை திறப்பு விழாவில் சித்து பங்கேற் றுள்ளார்.

குருநானக்கின் 550வது பிறந்த நாளை முன்னிட்டு கர்தார்பூர் பாதை திறக்கப்படுகிறது.

சீக்கியர்கள் ‘விசா’ இல்லாமல் பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரா சென்று வழிபடுவதற்காக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி பஞ்சாப்பில் உள்ள தேராபாபா நானக் குருத்வாராவிலிருந்து கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாரா வரை நான்கு கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தில் ராவி என்ற நதிக்கரையோரத்தில் ஸ்ரீ நான்கானா சாஹிப் என்ற இடத்தில் 550 ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் பிறந்ததாக நம்பப்படுகிறது.

அதே மாகாணத்தில் கர்தார்பூரில் அவர் உயிர்நீத்த இடம் சமாதியாக பாதுகாக்கப்பட்டு வழிபாடு கள் நடத்தப்படுகின்றன. குருநானக்கின் 550வது பிறந்த நாள் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப் படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!