கணவரால் தாக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவமனையில் தஞ்சம்

புத்ராஜெயா: கணவர் கத்தியால் சரமாரியாக வெட்டியதால் படுகாயம் அடைந்த கர்ப்பிணிப் பெண் காரில் ஏறி தப்பி மருத்துவமனையில் தஞ்சமடைந்தார். 

வெள்ளிக் கிழமை நடைபெற்ற சம்பவம் குறித்துப் பேசிய புத்ரா ஜெயா உதவி ஆணையர் ரோஸ்லி ஹாசன், “37 வார கர்ப்பிணிக்கு விரல்கள், வலது கை, வயிறு, முதுகு ஆகிய இடங்களில் கத்தி யால் வெட்டிய காயங்கள் இருந்தன,” என்றார்.

உடனடியாக மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று அவர் கூறினார்.

இதன் தொடர்பில் கர்ப்பிணிப் பெண்ணின் 39 வயது கணவரை போலிசார் கைது செய்து அவரிட மிருந்து கத்தியைப் பறிமுதல் செய்துள்ளனர். கர்ப்பிணி மனை வியை கணவர் தாக்கியதற்கான காரணம் தெரியவில்லை.