ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை

ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள கடைத்தொகுதிகளில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.

பல இடங்களிலும் வன்முறை வெடித்தது. கடைத்தொகுதி ஒன்றுக்கு வெளியே கூடியிருந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகை வீசியபோது உள்ளூர் தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர் கையில் காயம் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலிசார் கடுமையான முறையில் நடவடிக்கை எடுத்தனர்.

இதனால் சினங்கொண்ட குடியிருப்பாளர்கள் போலிசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் செயல்பாடுகள் சட்டவிரோதமானவை என்றும் அவற்றை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஹாங்காங் போலிசார் அறிக்கை வெளியிட்டனர்.

Loading...
Load next