ஐநா: ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் ஈராக் அரசு

பாக்தாத்: ஈராக்கில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வேலையின்மை, ஊழல் ஆகிய பிரச்சினைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் நேற்று அடித்து, உதைத்து விரட்டியடித்தனர்.

பாதுகாப்புப் படையினரின் இத்தகைய செயல் ஈராக்கில் ரத்த ஆறுகளை ஓட வைக்கும் என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று முன்தினம் தலைநகர் பாக்தாத்திலும் தென்ஈராக்கில் உள்ள பாஸ்‌ராவிலும்  ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏழு பேர் மாண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்த கொலை, கடத்தல் , மிரட்டல்கள் போன்ற உத்திகளை ஈராக்கிய அதிகாரிகள் கை யாண்டு வருவதாக ஐநா கவலை தெவித்தது. நசிரியா நகரில் உள்ள கல்வி இயக்குநரகத்தை இழுத்து மூட முயன்றோர் மீது அதிகாரிகள் நேற்று கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.

Loading...
Load next