கொலையாளியை மன்னித்த சிறிசேன; மக்கள் கொந்தளிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் மைத்திரபால சிறிசேன இன்னும் ஒரு வாரத்தில் பதவி விலகுகிறார்.

ஆனால் அதற்கு முன்பு அவர் செய்துள்ள காரியம் இலங்கை மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

சுவீடனைச் சேர்ந்த பதின்ம

வயது பெண்ணைக் கொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆடவரை மன்னித்து விடுதலை செய்துள்ளார் அதிபர் சிறிசேன. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜூட் ஜெயமஹா பணக்கார, செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்.

2005ஆம் ஆண்டில் விடுமுறைக்காக இலங்கை சென்றிருந்த யிவோன் யோன்சனுக்கும் அவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து யோன்சனை அவர் அடித்தே கொன்றார். யோன்சனின் மண்டை ஓடு 64 துண்டுகளாக உடைந்ததாக அப்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஜெயமஹா விடுவிக்கப்பட்டது குறித்து யோன்சனின் சகோதரி ஃபேஸ்புக் மூலம் கவலை தெரிவித்துள்ளார்.  அதிபரின் செயலுக்கு இலங்கை நாட்டவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Loading...
Load next