குல்னா: இந்தியாவின் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்கள் மற்றும் பங்ளாதேஷின் கடலோரப் பகுதிகளை சூறையாடிய 'புல்புல்' புயலில் சிக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. இதில் பங்ளாதேஷியர் 12 பேர்; இந்தியர்கள் 12 பேர். பங்ளாதேஷின் போலா தீவைச் சேர்ந்த ஐவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புயலால் 10,000 குடிசை, தகர, மூங்கில் வீடுகளும் 200,000 ஹெக்டர் பயிர்களும் சேதமடைந்தன என்று பங்ளாதேஷ் பேரிடர் நிர்வாக இணையமைச்சர் எனாமுர் ரஹ்மான் தெரிவித்தார். புயலால் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்ட 120,000 இந்தியர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.
'புல்புல்' புயல்: பலி 24ஆக உயர்வு
1 mins read

