கம்போடியாவில் கடல்நாகப் படகுப் போட்டி

கம்போடியத் தலைநகர் நோம்பென்னில் கடல்நாகப் படகுப் போட்டி களைகட்டியுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இப்போட்டியில் ஏறத்தாழ 300 போட்டியாளர்கள் பங்கெடுத்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் கம்போடியப் பிரதமர் ஹுன் சென்னும் அந்நாட்டின் மூத்த அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் நடைபெறும் இப்படகுப் போட்டியின் சிறப்பு அம்சமாக இசைக் கச்சேரிகளும் வாணவேடிக்கையும் இடம்பெறுகின்றன. படம்: ஏஎஃப்பி