நீதிமன்ற அறையில் துப்பாக்கிச்சூடு; மூவர் பலி

நீதிமன்ற அறையில் துப்பாக்கிச்சூடு; மூவர் பலி

1 mins read
e74f57a0-fdf3-4857-8105-826aae90b79d
அரச தாய்லாந்து போலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வெளியே விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி -

தாய்லாந்தின் சந்தாபுரி மாநில நீதிமன்ற அறையில் துப்பாக்கிக்காரன் ஒருவன் சுட்டதில் இரு வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து, அங்கிருந்த பாதுகாவலர் எதிர்த் தாக்குதல் நடத்தியதில் அந்தத் துப்பாக்கிக்காரனும் உயிரிழந்தான். சம்பவத்தை தாய்லாந்து போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

தலைநகர் பேங்காக்கில் இருந்து 250 கிலோ மீட்டர் தென்கிழக்கே உள்ள அந்த நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.