எருமை மாட்டின்மீது மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

1 mins read
221a50a4-d986-47e5-a93d-b8cd864f73fe
நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளோட்டி எருமை மாட்டின்மீது மோதினார். படம்: தி ஸ்டார் -

மலேசியாவின் கோத்தா கினபாலுவிலிருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் டெலிபோக்-டெங்கிலான் சாலையில் எருமை மாடு ஒன்றின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டுபோனார்.

ஜோமியஸ் ஜேக்சன் எனும் 43 வயது கடை உதவியாளர் கோத்தா பிலோட் எனும் இடத்திலிருந்து டுவாரானுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 3.40 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

எதிர்பாராத விதமாக சாலைச் சந்திப்பு ஒன்றிலிருந்து எருமை மாடு சாலைக்கு நகர்ந்ததையடுத்து, நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளோட்டி அதன் மீது மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார்.

ஜேக்சனின் குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டதுடன் அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், இந்தச் சம்பவத்தில் எருமை மாட்டுக்கு காயம் ஏதும் ஏற்பட்டதா என்பதைப் பற்றிய தகவல் இல்லை.

குறிப்புச் சொற்கள்