புதர்த் தீ: 50க்கும் அதிகமான வீடுகள் சேதம்

புதர்த் தீ: 50க்கும் அதிகமான வீடுகள் சேதம்

1 mins read
1e150fe5-726b-4ba6-a749-c654d4717026
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் அருகே புதர்த் தீ வேகமாகப் பரவி வரும் வேளையில், இந்த மாது தமது மகளைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுகிறார். படம்: இபிஏ -

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் நேற்று குளிர்ச்சியான வானிலை நிலவியதன் காரணமாக அங்கு பரவி வரும் புதர்த் தீயை அணைப்பதற்கு தீயணைப்பாளர்களின் பணி சற்று எளிமையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் பரவிய புதர்த் தீயால் இதுவரை ஏறத்தாழ 50 வீடுகள் எரிந்துவிட்டன. அங்கு கிட்டத்தட்ட 80 இடங்களில் இன்னும் தீ எரிந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், வடகிழக்கு மாநிலமான குவீன்ஸ்லாந்தில் காற்றின் திசை மாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் தீயின் தாக்கம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கிட்டத்தட்ட 1,000 கிலோ மீட்டர் சுற்றளவில் எரிந்துகொண்டிருக்கும் தீயை அணைக்க, தீயணைப்பாளர்கள் பல நாட்களாக கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், புதர்த் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.