ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டதாக தகவல்

கோலாலம்பூர்: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியாவின் ‘ரோக் யுகேஸ்’ இசைக்குழுவின் கித்தார் கலைஞர் அகேல் ஸைனல் (படம்) கொல்லப்பட்டதை மலேசியாவின் புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் துணைத் தலைமை இயக்குனர் அயூப் கான் மைதீன் உறுதிப்படுத்தினார்.

போலிசாருக்கு கிடைத்த தகவலின்படி வான் முகம்மது அகில் வான் ஸைனல் அபிடின், 39, எனும் உண்மையான பெயர் கொண்ட அந்த நபரைக் குறிவைத்து சிரியாவில் ரஷ்யப் படைகள் கடந்த மார்ச் மாதம் மேற்கொண்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

“கடந்த மார்ச் மாதம் பாக்

ஹவுஸ்ஸில் உள்ள அகிலின் வீட்டில் விமானப் படைகள் குண்டு வீச்சித் தாக்குதல் நடத்தியபோது அவர் கொல்லப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தீவிரவாத கும்பலின் முக்கிய தலைவர்களாக இருந்த இதர நான்கு மலேசியர்களும் கொல்லப்பட்டனர்,” என அயூப் கான் கூறினார்.

மேலும் அகிலின் மனைவி, அவரது இரண்டு, மூன்று வயதுடைய இரு குழந்தைகளும் பெல்ஜியத்தைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டதாகவும் திரு அயூப் கான் கூறினார்.

மற்றொரு முக்கிய தீவிரவாதியான முகம்மது ரஃபி உடின், 53, கடந்த ஜனவரியில் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட ரஃபி, கே.எம்.எம். எனப்படும் மலேசிய முஜாஹிதீன் குழுவின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஆவார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்
நியூசிலாந்தில் மிக உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்றான ‘ஒயிட் ஐலண்ட்’ நேற்று திடீரென புகையையும் சாம்பலையும் கக்கியது. 
படம்: டுவிட்டர்/மைக்கல் ஷேட்

நியூசிலாந்தில் மிக உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்றான ‘ஒயிட் ஐலண்ட்’ நேற்று திடீரென புகையையும் சாம்பலையும் கக்கியது.
படம்: டுவிட்டர்/மைக்கல் ஷேட்

09 Dec 2019

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு; ஐவர் உயிரிழப்பு, பலர் காயம்

கடந்த ஆண்டில் இந்த பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர் பிலிப்பீன்ஸ் நாட்டை சேர்ந்த கெட்ரினா கிரே (வலது). இவ்வாண்டின் வெற்றியாளரான தென் ஆப்பிரிக்காவின் சோசிபினி துன்சிக்கு அவர் மகுடம் சூட்டினார். படம்: ராய்ட்டர்ஸ்

09 Dec 2019

தென் ஆப்பிரிக்க நங்கை இவ்வாண்டின் பிரபஞ்ச அழகி

ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவாளர்கள் தங்களின் ஐந்து கோரிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் கைகளை உயர்த்தியவாறு நேற்றைய பேரணியில் பங்கேற்றனர். படம்: இபிஏ

09 Dec 2019

ஆர்ப்பாட்டங்களின் ஆறுமாத நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பேரணி