'தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டால் ஜோகூரின் தேவைக்கே முன்னுரிமை'

'தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டால் ஜோகூரின் தேவைக்கே முன்னுரிமை'

1 mins read

கோலாலம்பூர்: ஜோகூரில் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டால் வெளிநாட்டினரைவிட ஜோகூர் மக்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என அந்நாட்டு நீர், நில, இயற்கை வளத்துறை அமைச்சர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

1962ஆம் ஆண்டில் கையெழுத்தான தண்ணீர் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற மலேசியாவின் யோசனையை சிங்கப்பூர் கருத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூர், ஜோகூரிடையே உள்ள தற்போதைய தண்ணீர் விநியோக நிலை குறித்து நேற்று முன்தினம் மலேசிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் சேவியர் இவ்வாறு கூறினார்.