வெனிசில் கடும் மழை; அவசரநிலையை அறிவித்தார் நகர மேயர்

வெனிசில் கடும் மழை; அவசரநிலையை அறிவித்தார் நகர மேயர்

1 mins read
ebc3b079-a370-476b-9bf7-5951ebbaa57c
வெனிஸ் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அந்நகரின் மேயர் லுய்கி பிரக்னாரோ பார்வையிடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

வெனிஸ்: இத்தாலியின் எழில் மிகுந்த வெனிஸ் நகரில் அடைமழை கொட்டிய நிலையில், பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் லாகூன் நகரில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 187 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், புனித மார்க் சதுக்கம், பெசிலிக்கா தேவாலயம், குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், கனமழை பொழிவால் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பேரழிவுகால அவசர நிலையை அறிவித்துள்ள நகர மேயர் லுய்கி பிரக்னாரோ, அரசிடம் இருந்து நிதி உதவி கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.