கோத்தபயவைக் கடுமையாக விமர்சித்து நூலாசிரியருக்கு கத்திக்குத்து

கொழும்பு: இலங்கையின் அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.  இதில் ஆளுங்கட்சி சார்பாக சஜித் பிரேமதாசாவும் எதிர்க்கட்சி சார்பாக கோத்தபய ராஜபக்‌சேவும் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌சேவின் சகோதரரான கோத்தபயவைக் கடுமையாக விமர்சித்து நூல் வெளியிட்ட கதாசிரியர் திரு லசந்தா விஜரத்னே தாக்கப்பட்டுள்ளார்.

திரு விஜரத்னேயின் வீட்டிற்குள் நேற்று அத்துமீறி நுழைந்த கும்பல் அவரது  மனைவியின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியது.

திரு விஜரத்னேயின் கையில் தாக்குதல்காரர்கள் கத்தியால் குத்தினர்.

இந்தத் தகவலை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் திரு விஜரத்னேயின் வழக்கறிஞர் திரு தாரகா நானயக்காரா தெரிவித்தார்.