கோலாலம்பூர்: கெஅடிலான் கட்சியின் இளைய உறுப்பினர்களைத் தாம் சந்தித்துப் பேச முயற்சி செய்வதாகவும் அதைக் கட்சியின் இளையரணித் தலைவர் அக்மால் நஸ்ருல்லா முகம்மது நசீர் தடுப்பதாகவும் மலேசியப் பொருளியல் விவகார அமைச்சரும் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவருமான அஸ்மின் அலி கூறியுள்ளார்.
இதற்குத் திரைமறைவிலிருந்து யாரோ செயல்படுகிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.
அவசரக்கூட்டத்தைக் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், தலைமைச் செயலாளர் சய்ஃபுதீன் நசுடியோன், இளையரணித் தலைவர் அக்மால் ஆகியோருக்கு எதிராக மூன்றில் இரண்டு இளையரணி உறுப்பினர்கள் குரல் கொடுத்திருப்பதாக திரு அஸ்மின் அலி தெரிவித்தார். கட்சித் தலைமைத்துவம் தொடர்பாக பெரும் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கட்சி உறுப்பினர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் திரு அஸ்மின் அலி தெரிவித்தார்.

