சுடச் சுடச் செய்திகள்

முதலையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்

முதலையின் பிடியில் சிக்கி ஆஸ்திரேலிய வனவிலங்கு சரகர் ஒருவர் அதனுடன் சண்டையிட்டுத் தப்பினார்.

54 வயது கிரேக் டிக்மேன் எனும் அந்த வனவிலங்கு சரகர் வடக்கு ஆஸ்திரேலியா விலுள்ள ‘முதலைப் பகுதி’ என்றறியப்படும் இடத்திற்குக்  கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்க செல்ல முடிவு செய்தார்.

அந்த கடற்கரையில் தனக்கு பின்புறத்திலிருந்து வந்த சுமார் 2.8 மீட்டர் நீளமுள்ள முதலை, தன் தொடையைக் கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல முயன்றபோது அதன் கண்ணுக்குள் கட்டைவிரை விட்டு ஆட்டி, அது அசந்த நேரத்தில் தான் தப்பியதை அச்சத்தோடு செய்தியாளர்களிடம் விவரித்தார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிரேக் டிக்மான்.

அவரது கைகளிலும் கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டபோதும் தாமாகவே  45 நிமிடங்கள் காரை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்று சேர்ந்தார். 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity