புதர்த் தீ பரவலைக் கட்டுப்படுத்த ‘எதிர்த் தீ’

ஆஸ்திரேலியாவில் முன்னதாகவே தொடங்கிவிட்ட புதர்த் தீச்சம்பவங்களால் சிட்னி வடமேற்கில் கோலோ ஹைட்ஸ் என்ற பகுதியில் சேதமடைந்த சொத்து. இதன் புறநகர் பகுதியிலுள்ள 40,460 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் எரியும் நிலையில் கோஸ்பர்ஸ் மலையைச் சுற்றி ‘எதிர்த் தீ’ மூட்டி தீ பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ‘எதிர்த் தீ’ என்பது காட்டுத் தீ பரவுவதற்கு முன்பே காய்ந்த, வறண்ட இடங்களை வேண்டுமென்றே தீயிட்டுக் கொளுத்திக் கட்டுப்படுத்துவதாகும். ஆஸ்திரேலியாவில் வெப்பநிலை அடுத்த வாரம் உயரக்கூடும் என்பதால், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்