தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி

ஜோகூர்: மலேசியாவின் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்ட டாக்டர் வீ ஜீ செங் 15,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

டாக்டர் வீ,  இனியும் காலம் தாழ்த்தாமல் ஆக செய்ய வேண்டிய பணிகளில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறியுள்ளார். மலேசியாவின் தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளரான திரு வீ, இந்த வெற்றியைத் தொடர்நது பொந்தியான், பெக்கான் நானாஸ் ஆகிய தொகுதிகயில் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற சமூக சேவை நிலையங்களைத் திறக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

"அந்த நிலையங்களில் மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் குறைகள் குறித்து குரல் கொடுக்கலாம்," என்று நேற்று தாமான் உத்தமா, பெக்கான் நானாஸ் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வருகையளித்த டாக்டர் வீ இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பொறுப்புடன் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றப்போவதாக சூளுரைத்துளூளார்.

தேர்தலுக்கு முன்னதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் உறுதியளித்தார்.

இந்தத் தேர்தலில் டாக்டர் வீக்கு 25,466 வாக்குகளும் பக்கத்தான் ஹரப்பானின் வேட்பாளரான கர்மைன் சர்டினிக்கு 10,380 வாக்குகள் கிடைத்தன. ஜெராகனின் வெண்டி சுப்பிரமணியம் 1,707 வாக்குகளும் பெர்ஜசாவின் டாக்டர் பதுருல்ஹி‌ஷாம் அப்துல் அஸிஸ் 850 வாக்குகளையும் பெற்றனர். 

சுயேச்சை வேட்பாளர்களான டாக்டர் ஆங் சுவான் லாக் 380 வாக்குகளும் ஃபரிடா அர்யானி அப்துல் கஃபார் 32 வாக்குகளையும் பெற்றனர்.

596 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

தஞ்சோங்  பியாய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த  முன்னாள் துணை அமைச்சர் முகம்மது ஃபரித் முகம்மது ரஃபிக் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி  காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

நேற்று காலை எட்டு மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. 

74.4% வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் கூறியது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுடியூப்பில் இருந்து எடுக்கப்பட்ட படம்.

15 Dec 2019

ஹாங்காங்: முதியவர் இறந்த சம்பவத்தில் ஐவர் கைது

போட்டியொன்றில் கூர்க்கா இளையர்கள் கூடையைச் சுமந்துகொண்டு ஓடு கின்றனர். சுமார் 48 நிமிடத்தில் இந்தப் போட்டியை அவர்கள் முடிக்க வேண்டும். லோட்டஸ் பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த இவர்கள் பிரிட்டனிலும் சிங்கப்பூரிலும் பணியாற்ற கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு தயாராகின்றனர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Dec 2019

ராணுவத்தில் கூர்க்கா பெண்களைச் சேர்க்க பிரிட்டன் திட்டம்

அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என்று கூறிவந்த பிரதமர் மகாதீர் தற்போது பிரதமராக யார் வருவார்கள் என்பது தமக்குத் தெரியாது என்று டோஹா கருத்தரங்கில் கூறியுள்ளார். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

15 Dec 2019

மகாதீர்: 2020க்குப் பிறகும் நானே பிரதமர்