எரிமலை வெடித்தது

ஜக்கார்த்தா: இந்தோனீசியாவின் மெராபி எரிமலை நேற்று காலை வெடித்தது. அப்போது 1,000 மீட்டர் உயரம் வரை வானத்தில் சாம்பலை கக்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

155 விநாடிகள் நீடித்த இந்த  எரிமலை வெடிப்பு நிகழ்வு நேற்று காலை 10.46 மணிக்கு நிகழ்ந்தது என்று தேசிய பேரிடர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் திரு அகஸ் விபோவோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மெராபி எரிமலை கடைசியாக  கடந்த 2016 அக்டோபரில் வெடித்தபோது 340க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர்.