சோல்: கூட்டு ராணுவப் பயிற்சியை ஒத்திவைப்பதாக தென்கொரியாவும் அமெரிக்காவும் அறிவித்துள்ளன.
இது வடகொரியாவுடனான உறவை மேம்படுவதற்கு ஏதுவாகவும் சமாதானத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த முடிவு எட்டப்பட்டதாக அந்நாடுகள் கூறியுள்ளன.
ஆனால் இந்த நடவடிக்கை பியோங்யாங்கிற்கு இன்னோர் சலுகை என்ற கூற்றை வாஷிங்டன் நிராகரித்துள்ளது.
ஒருங்கிணைந்த பறக்கும் பயிற்சி நிகழ்வு என அழைக்கப்படும் இந்த பயிற்சியின் போது பாவனை விமானப் போர் காட்சிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் போர் விமானங்களை உள்ளடக்கியிருக்கும்.
பியோங்யாங்கைப் பொறுத்தவரை, பயிற்சிகள் முந்தைய ஆண்டுகளிலிருந்த அளவைவிட குறைக்கப்பட்டன. ஆனாலும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வடகொரியா இன்னும் பொருட்படுத்தாமல் அவற்றை எதிர்த்து வருகிறது.
இவ்வாண்டு இறுதியில் நடைபெறுவதாக இருந்த அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை சில நாட்களுக்கு முன் வடகொரியா நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.