கோத்தபய: ‘தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்’

இலங்கையின் அதிபராகப் புதிதாக பதவியேற்றுள்ள திரு கோத்தபய ராஜபக்சே தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.  இலங்கையின் வடமத்திய பகுதியிலுள்ள அனுராதாபுரத்தின் ருவான்வெல்லி சேயா பெளத்த ஆலயத்தில் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா, திரு  கோத்தபய ராஜபக்சேக்குப் பதவிப் பிரமாணம் செய்தார்.

தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்தபோதும் அதையும் மீறி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் மாநிலங்களில் கோத்தபய ராஜபக்சேக்கு அதிக வாக்குகள் கிடைத்தாகக் கூறப்படுகிறது.

தமிழ் மக்கள் தமக்கு எதிர்பார்த்த அளவில் வாக்களிக்காதபோதும் அனைவரையும் தாம் சமமாக பார்ப்பதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் தம்பியான திரு ராஜபக்சே கூறுகிறார்.