பாகிஸ்தானில் படகு கவிழ்ந்தது; பலர் பலி

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்தது; பலர் பலி

1 mins read
Google News Preferred Icon

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் 40 பயணிகளுடன் சென்ற படகு சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 8 பேரின் சடலங்களை மீட்புப்படையினர் கண்டெடுத்துள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ஒகாரா மாவட்டத்தில் நேற்று 40 பயணிகளுடன் சட்லெஜ் ஆற்றில் பயணித்த படகு திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, தண்ணீரில் மூழ்கியது.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு படையினர் சடலங்களை கரை சேர்த்தனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மக்களின் உதவியுடன் குறித்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.