ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி

ஆஸ்திரேலிய நிறுவனங்களில் தலைமை நிர்வாகிகளாகப் பணிபுரிவோரில் அதிக சம்பளம் பெறுகின்றவர்களின் பட்டியலில் முதலிடத்திலிருப்பவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட ஷெமாரா விக்ரமநாயகே எனும் பெண்மணி என்று ஆஸ்திரேலியாவின் ஃபைனான்சியல் ரிவ்யூ பத்திரிகை தெரிவித்துள்ளது.

தற்போது சிட்னியில் வசித்துவரும் அவர்  மேக்குவாரி குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆவார். கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

தலைமை நிர்வாகி சம்பள தரவரிசைப் பட்டியலில் ஒரு பெண் முதலிடம் பெற்றிருப்பது இதுவே முதல் தடவை என்றும் முதல் ஐம்பது இடங்களுக்குள் நான்கு பெண்கள்தான் இடம்பிடித்திருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஷெமாரா விக்ரமநாயகே லண்டனிலிருந்து சிட்னிக்கு புலம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity