தென்கொரிய படகில் தீ விபத்து: ஒருவர் மரணம், பலரைக் காணவில்லை

தென்கொரிய படகில் தீ விபத்து: ஒருவர் மரணம், பலரைக் காணவில்லை

1 mins read

சோல்: தென்கொரியாவின் தெற்கு கரையோரப் பகுதி அருகே சென்றுகொண்டிருந்த மீன்பிடி படகு ஒன்று தீப்பிடித்துக் கொண்டதில் அதிலிருந்த மீனவர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

மேலும் 11 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தப் படகில் 12 பேர் இருந்ததாக கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களில் அறுவர் தென்கொரியர்கள், எஞ்சிய அறுவர் வியட்னாமியர்கள் எனத் தெரிகிறது.