அமைச்சருடன் அம்னோ எம்.பி.க்கள் ரகசிய சந்திப்பு: மலேசிய அரசியலில் சலசலப்பு

மலேசியாவின் எதிர்த்தரப்பு தேசிய முன்னணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அம்னோ கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலியை அவரது அதிகாரத்துவ இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக வெளியான செய்தியால் மலேசிய அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

புத்ராஜெயாவில் உள்ள அமைச்சரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு இச்சந்திப்பு நடைபெற்றதாகவும் அம்னோ முன்னாள் உதவித் தலைவர் ஹிஷாமுதின் ஹுசைன் உள்ளிட்ட 22 அம்னோ எம்.பி.க்கள் சந்திப்பில் பங்கேற்றதாகவும் தகவல் வெளியானது.

சந்திப்பின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் ஜோகூரின் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் பெரும் தோல்வியைச் சந்தித்த ஒரு சில தினங்களில் இந்தச் சந்திப்பு நடைபெற்றிருப்பது அரசியல் முக்கியத்தவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அமைச்சர் அஸ்மின் அலி பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராகவும் உள்ளார். பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.பி.க்களும் சந்திப்பின்போது இருந்ததாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், “இந்தச் சந்திப்பு பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இது குறித்து அஸ்மினிடம் விளக்கம் கேட்கப்படும். சந்திப்பின் நோக்கத்தை அவர் விளக்குவதே முறையாகும்,” என்றார்.

பிரதமரும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவருமான மகாதீர் முகம்மது கூறுகையில், “சந்திப்பு நடைபெற்றதை ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது,” என்றார்.

இதற்கிடையே இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக ஹிஷாமுதின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அம்னோ தலைமை நெருக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் ஆடம் கூறுகையில் அஸ்மினுடனான சந்திப்பின் பின்னணியில் ஹிஷா

முதின் செயல்பட்டதாகப் பகிரங்கமாகக் கூறினார்.

ஆனால் சந்திப்புக்குத் தாம் ஏற்பாடு செய்யவில்லை என்று ஹிஷாமுதின் மறுத்துள்ளார். அஸ்மினைத் தாம் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவர் தமது டுவிட்டர் தகவலில், “அம்னோ ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரிக்க முடிவு செய்தால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இவ்விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!