நினைத்தது வேறு, நடந்தது வேறு; ஆனாலும் லாபம்தான்

நினைத்தது வேறு, நடந்தது வேறு; ஆனாலும் லாபம்தான்

1 mins read
0e7de0ff-b10e-451c-ad9c-2e8effe21713
நீச்சல் உடையில் பெட்ரோல் நிலையத்துக்குப் படையெடுத்த ஆண்கள். படங்கள்: ஊடகம் -

பெட்ரோல் நிலையம் திறந்த முதல் 3 மணி நேரத்துக்குள் நீச்சல் உடையில் வருவோருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கடைக்கு எதிர்பாராத வகையில் விளம்பரத்தைத் தேடித்தந்துள்ளது.

ரஷ்யாவின் சமாரா நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்காக அதன் உரிமையாளர் இந்த வினோத சலுகை அறிவித்தார்.

பெண்கள் நீச்சல் உடையில் வந்து இலவச பெட்ரோலை பெற்று செல்வார்கள். அதன் மூலம் பெட்ரோல் நிலையம் கவர்ச்சிகரமான இடமாக மாறி மக்களிடம் பிரபலமாகிவிடும் என உரிமையாளர் நினைத்தார்.

ஆனால் இலவச பெட்ரோல் குறித்த விளம்பரம் வெளியானதும் ஏராளமான ஆண்கள் நீச்சல் உடையில் பெட்ரோல் நிலையத்துக்குப் படையெடுத்தனர்.

நீச்சல் உடை அணிந்து வர வேண்டியவர்கள் ஆண்களா, பெண்களா என்ற விவரம் விளம்பரத்தில் குறிப்பிடப்படாததால், நீச்சல் உடையில் யார் வந்தாலும் பெட்ரோலை இலவசமாக வழங்கவேண்டிய நிலை கடைக்காரருக்கு.

அலைமோதிய ஆண்கள் கூட்டத்தைச் சமாளிக்க இயலாமல் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் திணறிப்போனார்கள்.

இந்த வித்தியாசமான விளம்பரத்தால், கடை விளம்பரம் ரஷ்யர்களை எட்டியதோ இல்லையோ, ஆண்கள் நீச்சல் உடையில் சென்று வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிச் சென்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் வழியாக பிரபலமாகியுள்ளன.