மற்றவரின் ‘வைஃபை’யை திருட்டுத்தனமாகப் பயன்படுத்திய தந்தை, மகன் கொலை

தன்னுடைய ‘வைஃபை’ இணையத் தொடர்பைப் பயன்படுத்தியதற்காக அண்டை வீட்டில் வசித்த பல்கலைக்கழக மாணவர், அவரது தந்தை ஆகிய இருவரை ஆடவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

காசிம் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர் நேற்று (நவம்பர் 19) கைது செய்யப்பட்டதாக சாமா தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.

கராச்சியில் உள்ள ஷா லத்திஃப் டவுனில் காசிம் வசித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கராச்சி பல்கலைக்கழக மாணவரான ஹாரிஸ், அவரது தந்தை ஆகியோர் திருட்டுத் தனமாக தனது இணையத் தொடர்பைப் பயன்படுத்தியதற்காக காசிம் இந்தக் கொலைகளைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.

குற்றத்தை காசிம் போலிசாரிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity